Monday, February 11, 2008

Hardware and Software, புதிய கணிப்பொறி வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை

புதியதாக கணிப்பொறி வாங்குபவர்கள் கவனத்திற்கு:

நீங்கள் புதியதாக கணிப்பொறி வாங்குபவராக இருந்தால், முதலில் எதுபோன்ற தேவைக்கு கணிப்பொறி வாங்குகிறீர்கள் என்பதை (வேகமா அல்லது நீண்டநாள் உழைக்க வேண்டுமா) தீர்மானித்துக்கொள்ளுங்கள். எனக்கு விரைவாக இயங்கக்கூடிய கணிப்பொறிதான் வேண்டும் என்பவர்கள் AMD processor கொண்ட கணிப்பொறியை வாங்குவது நல்லது. ஏனெனில் AMD கணிப்பொறிகள் Intel கணிப்பொறிகளை விட சுறுசறுப்பாக செயல்படக்கூடியது. ஆனால் AMD கணிப்பொறிகளை கையாளும்போது சற்று கவனம் தேவை. கண்டிப்பாக UPS வழியாகத்தான் மின்சாரம் வழங்க வேண்டும். முறையாகத்தான் Shutdown மற்றும் Restart செய்யவேண்டும். கணிப்பொறி இயங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென Switchoff மற்றும் Restart செய்வது கூடாது.GAMES மற்றும் GRAPHICS செயல்பாடுகளுக்கு நன்றாக ஒத்துழைப்பு தருகிறது.

Intel கணிப்பொறிகள் நீ.........டித்து உழைக்ககூடியது. ஆனால் செயல்பாடு ச....ற்று மந்தமாகத்தான் இருக்கும். அது Dual Core ஆக இருந்தாலும் சரி அல்லது Core2Duo ஆக இருந்தாலும் சரி. ஆனால் AMD யை விட நெகிழ்வுத்தன்மை உடையது. அதாவது திடீரென Shutdown மற்றும் Restart செய்தாலும் தகவல் இழப்பு ஏற்படுமேயொழிய Hardware பாதிப்பு ஏற்படாது. GAMES போன்ற செயல்பாடுகளின் போது கணிப்பொறி மிக மெதுவாகத்தான் இயங்குகிறது. இவையெல்லாம் என் அனுபவத்தில் நேரடியாகவும் மற்ற பயனாளர்களிடமும் கண்ட உண்மை. எனவே புதியதாக கணிப்பொறி வாங்குபவர்கள் இதுபோன்ற விசயங்களை சீர்தூக்கிப்பார்த்து பின்பு வாங்கினால், வாங்கிய பிறகு புலம்பித்தள்ளவேண்டிய அவசியமில்லை.
 
AddMe - Search Engine Optimization